Wednesday, October 23, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
Homeநாகார்ஜுனாவின் மண்டபம் இடிப்பு : கீதையில் சொன்னபடி நடவடிக்கை..!

நாகார்ஜுனாவின் மண்டபம் இடிப்பு : கீதையில் சொன்னபடி நடவடிக்கை..!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் மாதப்பூரில் நடிகர் நாகார்ஜுனாவிற்குச் சொந்தமான ‘என் கன் வென்ஷன் சென்டர்’ என்ற மண்டபம் உள்ளது. அந்த மண்டபம்தும்மிடிகுண்டா ஏரிக்குச் சொந்தமான 3.30 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் ஐதராபாத்தில்கடந்த சில நாட்களாக ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. நடிகர் நாகார்ஜுனாவின் மண்டபமும் இடிக்கப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த நாகார்ஜுனா, ‘மண்டபம் கட்டப்பட்டிருந்த இடத்திற்கு முறைப்படி பட்டா உள்ளது என்றும் ஓர் அங்குல இடம்கூட ஆக்கிரமிக்கப்படவில்லை’ என்றும், தெரிவித்தார்.

இந்நிலையில், ஐதராபாத்தில் இஸ்கான் அமைப்பு சார்பில் நடத்த ஜன்மாஷ்டமி விழாவில் பங்கேற்ற, முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி கூறியதாவது:-

தர்மத்தை நிலை நிறுத்த வேண்டும். அதற்கு எந்த வழியையும் கடைப்பிடிக்கலாம் என்பதைத் தான் மகாபாரதம் வாயிலாக நமக்கு கிருஷ்ண பகவான் தெரிவித்துள்ளார்.

மக்கள் நலனுக்காக தர்மத்தை காப்பாற்றி, அதர்மத்தை அழிக்க வேண்டும்என பகவத் கீதையில் கிருஷ்ணர் தெரிவித்துள்ளார்.

ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள், மக்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. இவற்றை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவது, மாபெரும் பாவம். மக்கள் நலனுக்கு எதிரானது.

கிருஷ்ணரின் போதனைப்படி நடக்கும் தெலுங்கானா மாநில காங்கிரஸ் அரசு, ஏரிகள், குளங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கும் நடவடிக்கைகளை, மக்கள் நலனுக்காக மேற்கொண்டுள்ளது.

இந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களின் உரிமையாளர்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள், அதனால், கட்டிடங்களை இடிப்பதற்கு கடும் எதிர்ப்புகள் இருந்தாலும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் முதல் மந்திரியின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments