Wednesday, October 23, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
Homeபோதைப்பொருளை கட்டுப்படுத்த தேசிய மக்கள் சக்தியின் திட்டம்..!

போதைப்பொருளை கட்டுப்படுத்த தேசிய மக்கள் சக்தியின் திட்டம்..!

நிகழ்காலத்தில் போதைப்பொருள் பாவனை துரிதமாக அதிகரித்துள்ளதால் அது ஒரு சமூக பேரழிவாக மாறியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடும்பத்தில் போன்றே சமூகத்திலும் பல பாரதூரமான சிக்கல்கள் உருவாக போதைப்பொருள் காரணமாக அமைந்துள்ளது.

பாடசாலைப் பிள்ளைகளை போதைப் பொருளுக்கு அடிமையாக்கிக் கொள்வதற்கான முயற்சிகள் அதிகரித்துள்ளன.

போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வருதலைப் போன்றே விநியோகிப்பதைக் கட்டுப்படுத்துவதற்காக நடப்பு ஆட்சிமுறை தவறியுள்ளதோடு போதைப்பொருள் பாவிப்பவர்களை சிறைப்படுத்துவதன் மூலமாக மாத்திரம் இந்த தொல்லையை ஒழிக்கட்டிவிட இயலாது.

நிகழ்காலத்தில் போதைப்பொருள் பாவனை ஒரு சமூகப் பேரிடரை உருவாக்க ஏதுவாக அமைந்துள்ளதோடு 2022ஆம் ஆண்டில் 152,979 பேர் போதைப்பொருள் தவறுகள் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

எனினும் இவை மத்தியில் புனர்வாழ்வு நிகழ்ச்சித்திட்டங்களுக்காக 1930 பேர் மாத்திதிரமே ஆற்றுப்படுத்தப்பட்டிருந்தார்கள்.

சிறைச்சாலையில் அனுமதிக்கப்படுகின்ற தவறாளிகள் மத்தியில் ஏறக்குறைய 60% போதைப்பொருள் சார்ந்த தவறுகள் காரணமாகவே சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள்.

ஈன்றளவில் அரசியல் மற்றும் வேறு சக்திகளின் பாதுகாப்பின் கீழ் இலங்கை பிராந்தியத்தில் போதைப்பொருள் பரிமாற்ற நிலையமாக மாறியுள்ளதோடு அது ஒழுங்கமைந்த குற்றச்செயல்கள் அதிகரிப்பதில் தாக்க மேற்படுத்தி உள்ளது. அதனால் தேசிய மக்கள் சக்தி போதைப்பொருட்களை தடுப்பதற்காக முன்னுரிமை வழங்கும்.

செயற்பாடுகள்…

• நாட்டில் போதைப்பொருட்களையும் பாதாள உலகத்தையும் ஒழித்துக்கட்டுவதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கை

• போதைப்பொருள்களை ஒழித்துக்கட்டுவதற்காக தனிவேறான பணியகமொன்று நிறுவப்படும்.

• போதைப்பொருட்கள் நாட்டுக்குள் வருவதை தடுப்பதற்காக கடல், வான் வழிகளை சோதனையிடுவதற்கான வசதிகளை அதிகரித்தல், நவீன உபகரணங்களை வழங்குதல் மற்றும் உத்தியோகத்தர்களை பயிற்றுவித்தல்.

• போதைப்பொருள்களுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை முறைப்படுத்தி போதைப்பொருள் பாவனையிலிருந்து அவர்களை மீட்டெடுத்தல்.

• போதைப்பொருள் சார்ந்த தவறுகளுக்கான தண்டனைகளை கடுமையாக்குதல், வழக்குகளை துரிதமாக தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

• பாடசாலைப் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கான இடையறாத நிகழ்ச்சித் திட்டங்களை அமுலாக்குதல்.

• அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பணிகளை விரிவாக்கி மக்களை போதைப்பொருள் கட்டுப்பாட்டுடன் இணைத்துக் கொள்வதற்கான கண்காணிப்புக் குழுக்களை தாபித்தல்.

• போதைப்பொருள்களை பாவிப்பதன் பாதகமான பெறுபேறுகள் பற்றி சமுதாயத்திற்கு விழிப்புணர்வூட்டுதல்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments