Wednesday, October 23, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
Homeஉக்ரைன் மீது மிசைல்களை ஏவி ரஷியா சரமாரி தாக்குதல் : மின்சாரம் முடக்கம்..!

உக்ரைன் மீது மிசைல்களை ஏவி ரஷியா சரமாரி தாக்குதல் : மின்சாரம் முடக்கம்..!

ரஷியா நேற்று இரவு, பல கட்டங்களாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த டிரோன்களை தங்களின் ராணுவம் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்திருந்தது. இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷியாவின் சராதோவ் [Saratov] பகுதியில் உக்ரைன் டிரோன்களை ஏவி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைனின் 20 டிரோன்களை தாக்கி அழித்துள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. டிரோன் விழுந்து சராதோவ் பகுதியில் உள்ள 38 மாடி குடியிருப்பு கட்டடம் தீப்பற்றி எரிந்தது.

இந்நிலையில் உக்ரைன் பகுதிகள் மீது ரஷியா விடாமல் தாக்குதல் நடத்தி வருகிறது. ராட்சத மிசைல்கள் மற்றும் டிரோன்களை உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதிகள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்களில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 37 பேர் காயமடைந்தனர். மேற்கு லுட்ஸ்க், கிழக்கு டினிப்ரோ மற்றும் தெற்கு சபோரிஜியா பகுதிகளில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மின்சார ஆற்றல் உள்கட்டமைப்பைக் குறிவைத்து மிசைல்கள் ஏவப்பட்டுள்ளன.

இதனால் நாட்டின் மிகப்பெரிய ஆற்றல் உற்பத்தி நிறுவனம் DTEK கீவ் உள்ளிட்ட தாக்குதலுக்கு உள்ளான 15 நகரங்களில் குறிப்பாக லெவிவ் [lviv] மின்சாரம் சேவைகளை நிறுத்தியுள்ளது. இதனை அந்த மாகாணத்தின் ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த தாக்குதலால் தண்ணீர் விநோயாகம் முடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments