Saturday, October 19, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
Homeதேயிலை ஏற்றுமதியில் தனித்து நிற்கும் Sunshine Tea Private Limited..!

தேயிலை ஏற்றுமதியில் தனித்து நிற்கும் Sunshine Tea Private Limited..!

இலங்கையில், 1967ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் 1987ஆம் ஆண்டு SKS Exports என்ற பெயரில் தன் பயணத்தை ஆரம்பித்து படிப்படியாக வளர்ச்சியடைந்து 2007ஆம் ஆண்டு Sunshine Tea Private Limited என்ற புதிய மாற்றத்துடன் உலகம் முழுவதும் அனைத்து வகையான தேயிலைகளிலும் நிபுணத்துவம் பெற்றுள்ளது.

இலங்கையில், களனி பிரதேசத்தில் அமைந்துள்ள இந்நிறுவனமானது அண்மையில், ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் களப்பயணம் ஒன்று ஏற்பாடு செய்தனர்.

அந்தவகையில், Sunshine நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சஞ்சீவ சரனபால இந்நிறுவத்தின் தொழிற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

விற்பனையில் ஆண்டுக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமாக வருவாயீட்டி வரும் இந்நிறுவனத்தில் தற்போது 300க்கும் அதிகமான ஊழியர்களோடு ஏற்றுமதி, இறக்குமதி என்று இரு பிரிவுகளாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுமட்டுமன்றி இந்நிறுவனத்தில் எவ்வித கலப்படமும் இன்றி சுவையான தேயிலைத்தூள் தயாரிக்கப்படுவதோடு தேநீர் பொதியிடல் இயந்திரங்களுக்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி Zesta, watawala, Gordon frazer, Avan Tea, Teazup போன்றவற்றுடன் 200இற்கும் மேற்பட்ட இலங்கை தேயிலை வகைகளை தயாரிப்பு வரம்பாக கொண்டிருக்கிறது.

மேலும், இந்நிறுவனமாகது தனது சொந்த வணிகக்குறிக்கு மட்டுமல்லாமல், பல்வேறு வணிகப் பெயர்களின் கீழ் Lable செய்து விற்பனை செய்யக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட தேயிலைகளை உற்பத்தி செய்கிறது.

தேயிலைத்தூள் உற்பத்தியானது பல பிரதேசங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தேயிலைகளை உரிய முறையில் பிரித்தெடுக்கப்பட்டு 5 படிமுறைகளின் கீழ் தேயிலை பதப்படுத்தப்பட்டு தூய்மையான தேயிலை பொதி செய்யப்பட்டு சந்தையில் விற்கப்படுகின்றது.

Sunshine நிறுவனத்திற்கு Great Place to Work (GPTW) srilanka அமைப்பால் 2024ஆம் ஆண்டிற்கான உற்பத்தி மற்றும் தயாரிப்புத் துறையில் சிறந்த 15 பணியிடங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளடன் ISO 9001 சான்றிதழ், FSSC 22000 சான்றிதழ், GMP (நல்ல உற்பத்தி நடைமுறைகள்) சான்றிதழ் , Fair Trade சான்றிதழ் , Rainforest Alliance சான்றிதழ், Organic சான்றிதழ், Halaal சான்றிதழ் மற்றும் SMETA ( sedex Members ethical Trade Audit) சான்றிதழ் போன்ற சான்றிதழ்களைப் பெற்றுள்ளது.

Sunshine Tea Private Limited நிறுவனம் ஐக்கிய நாடுகளின் உலகளாவிய ஒப்பந்தத்தில் (UNGC) கையொப்பமிட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் பல்வேறு வகையான தேயிலை தயாரிப்புக்களையும் அறிமுகம் செய்துள்ளதோடு சீனாவுடன் Bubble tea என்ற புதிய உற்பத்தியை தயாரிக்க உள்ளனர்.

மேலும், இலங்கையில் அநேகருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதோடு நாட்டிற்கு பெறுமதியாக அந்நியச்செலவாணியை ஈட்டித்தருவதில் அதீதமாக பொருளாதார பங்களிப்பை வழங்குகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments