Friday, October 18, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
Homeடெலிகிராம் செயலி நிறுவனர் பிரான்சை விட்டு வெளியேற தடை..!

டெலிகிராம் செயலி நிறுவனர் பிரான்சை விட்டு வெளியேற தடை..!

டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவை கடந்த 24-ஆம் திகதி பிரான்சில் அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.

செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோதச் செயல்களுக்கு டெலிகிராம் துணை போவதாகவும், பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவளிப்பதாகவும், பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாப்பதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவரது கைதுக்கு பல தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பாவெல் துரோவ் மீதான குற்றச்சாட்டுகளை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதையடுத்து பாவெல் துரோவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

5 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.46 கோடி) பிணைத்தொகை செலுத்த உத்தரவிட்டனர். மேலும் அவர் கோர்ட்டு கண்காணிப்பின் கீழ் நாட்டில் இருக்க வேண்டும். பிரான்சை விட்டு வெளியேறக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு 2 முறை போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments