Sunday, September 22, 2024
Homeபொது இடங்களில் பெண்கள் பேசக்கூடாது : வௌியான அதிரடி சட்டம்..!

பொது இடங்களில் பெண்கள் பேசக்கூடாது : வௌியான அதிரடி சட்டம்..!

ஆப்கானிஸ்தானில் பொது இடங்களில் பெண்கள் பேசக்கூடாது மற்றும் முகத்தையும் உடலையும் காட்டக்கூடாது என்று தலிபான்கள் கட்டுப்பாட்டை விதித்துள்ளனர்.

புதிய சட்டங்கள் ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிப்பாக கடுமையாக பாதித்தது, பெண்கள் தங்கள் முகத்தையும் உடலையும் மட்டுமல்ல, தங்கள் குரலையும் வீட்டிற்கு வெளியே மறைக்க வேண்டும்.

இந்த சட்டத்தை ஐக்கிய நாடுகள் சபையும் உரிமைக் குழுக்களும் சமீபத்திய விதிகளை கடுமையாக விமர்சித்துள்ளன.

அமெரிக்கப் படைகளை வெளியேற்றி ஆகஸ்ட் 2021 இல் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து , தலிபான்கள் பெண்களின் உரிமைகள் விஷயத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களில் அடைந்த முன்னேற்றத்தைப் பின்னுக்குத் தள்ளியுள்ளனர்.

அவர்கள் பொது வாழ்வின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பெண்களையும் சிறுமிகளையும் வெளியேற்றியுள்ளனர்.

புதிய தலிபான் விதிகள் ஆப்கானிஸ்தானில் பெண்களை மேலும் ஒடுக்குகிறது, பொது வாழ்க்கை மற்றும் அடிப்படை சுதந்திரங்களில் இருந்து அவர்களை தடை செய்கிறது. மேற்கத்திய அரசாங்கங்களால் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவிற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments