Monday, September 23, 2024
Homeதெலுங்கானாவில் வெள்ளப்பெருக்கு : வீட்டு மொட்டை மாடியில் தவிக்கும் நபர்..!

தெலுங்கானாவில் வெள்ளப்பெருக்கு : வீட்டு மொட்டை மாடியில் தவிக்கும் நபர்..!

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

குளங்கள், ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கி உள்ளன.

ஆந்திராவைப்போல அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும் பேய்மழை கொட்டி வருகிறது.

அங்குள்ள கம்மம் மாவட்டத்தில் 52.1 செ.மீ. மழை பெய்து வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப்போல மெகபூபாபாத் மாவட்டமும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது.

மேலும் அடிலாபாத், கமாரெட்டி, விகராபாத் உள்ளிட்ட மாவட்டங்களும் இந்த மழையால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. தலைநகர் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

இந்நிலையில் கம்மம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள வீடுகள் தண்ணீரில் மூழ்கின.

வீடு தண்ணீரில் மூழ்கிய நிலையில் மொட்டை மாடியில் அத்தியாவசிய பொருட்களை மாடியில் வைத்துவிட்டு, ஒருவர் நடந்து கொண்டிருக்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments