Sunday, September 22, 2024
Homeகிளிநொச்சி மாவட்ட வாக்காளர்கள் குறித்து வௌியான தகவல்..!

கிளிநொச்சி மாவட்ட வாக்காளர்கள் குறித்து வௌியான தகவல்..!

கிளிநொச்சி மாவட்டத்தில் 1 இலட்சத்து 907 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அதற்கு அமைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்கள் தயார்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கு மேலதிகமாக வாக்கெண்ணும் நடவடிக்கைகள் பழைய மாவட்டச் செயலக வளாகத்தில் 8 நிலையங்களில் நடைபெறவிருக்கின்றன.

நாளை முதல் நடைபெறவிருக்கின்ற தபால்மூல வாக்களிப்பிற்காக 3,656 அரச உத்தியோகத்தர்கள் தகுதி பெற்றுள்ளார்கள். அவர்களுக்காக 96 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் நாளை 4 ஆம் திகதியும், பொலிஸார் நாளையும் 6ஆம் திகதியும் ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்காக 5 மற்றும் 6ஆம் திகதியும் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறித்த நாட்களில் அவசர வேலை உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணத்தால் வாக்களிப்பை தவறவிடுகின்ற உத்தியோகத்தர்கள் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் பழைய மாவட்டச் செயலகத்தில் தமது வாக்கை செலுத்த முடியும்.

இதேவேளை, வாக்காளர்கள் அனைவரும் நேர காலத்தோடு வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறும், இறுதிநேரம் வரை காத்திருக்காது வாக்குரிமையை பயன்படுத்துமாறும் இதன்போது அவர் தெரிவித்தார்.

மேலும், தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் 3 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments