Saturday, September 21, 2024
Homeசர்க்கரைக்கு பதிலாக 'சுகர் பிரீ' பயன்படுத்தலாமா? : பாதிப்புகள் வருமா...!

சர்க்கரைக்கு பதிலாக ‘சுகர் பிரீ’ பயன்படுத்தலாமா? : பாதிப்புகள் வருமா…!

சர்க்கரை நோயாளிகளில் பலர் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக குறைந்த கலோரிகள் கொண்ட செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்துகின்றனர்.

அஸ்பார்டேம், சாக்கிரின், சுக்ரலோஸ், ஸ்டிவியா, சார்பிட்டால், அசிசல் பேம் போன்றவை கலந்த செயற்கை இனிப்பூட்டிகள் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், செயற்கை பழச்சாறுகள், சூயிங்கம் ஆகியவற்றில் சேர்க்கப்படுகிறது.

வேதியியல் ரீதியாக தயாரிக்கப்படும் இவை வெள்ளை சர்க்கரையை விட 200 முதல் 700 மடங்கு இனிப்பு அதிகம் கொண்டவை. இது குளுக்கோசில் இருந்து மாறுபடுவதால் ரத்த சர்க்கரையை அதிகப்படுத்தாது.

நிபுணர்கள் பரிந்துரையின்படி அஸ்பார்டேம் போன்ற செயற்கை இனிப்பூட்டிகளை ஒரு கிலோ உடல் எடைக்கு 40 மில்லி கிராம் வரை ஒருவர் உட்கொள்ளலாம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் என்று எந்த ஆராய்ச்சியும் இதுவரை நிரூபிக்கவில்லை. தினசரி உட்கொள்ளும் மிகக் குறைந்த அளவு செயற்கை இனிப்பூட்டிகளால் புற்றுநோய் ஏற்படாது.

செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு பாதகமாக செயல்படாது. இருப்பினும் அதிகமான பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments