Saturday, September 21, 2024
Homeவாக்குப்பதிவை சீர்குலைத்தால் துப்பாக்கி பிரயோகம்: பொலிஸாருக்கு அதிகாரம்

வாக்குப்பதிவை சீர்குலைத்தால் துப்பாக்கி பிரயோகம்: பொலிஸாருக்கு அதிகாரம்

வாக்களிப்பு நிலையங்களில் இடையூறு விளைவிப்பவர்கள் வாக்குப்பதிவை சீர்குலைப்பவர்கள் மற்றும் தேர்தல் பணிகளை சீர்குலைக்கும் நபர்கள் மற்றும் குழுக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்களை மேற்கோள்காட்டி லங்காதீப நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இடையூறு விளைப்பவர்களை உடனடியாக கைது செய்யுமாறும் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடு முழுவதும் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் பாதாள உலகக் கும்பல்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையொன்றும் அமுல்படுத்தப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்களை மேற்கொள்கோட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக விசேட புலனாய்வுக் குழுக்களும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சுமார் 02 லட்சம் சட்டவிரோத துப்பாக்கிகள் இருப்பதாக பாதுகாப்புப் படையினர் மதிப்பிட்டுள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments