சவூதி அரேபியாவில் கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்று வந்த ஒட்டகத்திருவிழா இன்றுநிறைவுக்கு வந்தது.பாலை வனக்கப்பல் என வர்ணிக்கப்படும் ஒட்டகங்களின் சிறப்புகள் மற்றும் அவற்றின்ஓட்ட வேகம் பயன்பாடு என்பனவற்றை விளக்கும் வகையில் இந்த திருவிழா சவூதி அரேபிய பட்டத்துஇளவரசரின் வழிகாட்டலில் சிறப்பாக இடம்பெற்றது. .
இந்த திருவிழாவுக்கான படப்பிடிப்பு குழுவில் பிரதான படப்பிடிப்பாளராக பணியாற்றியவர்களுள்ஒருவர் இலங்கையை சேர்ந்த முஹம்மது ஸைத் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமான பட்டத்து இளவரசரின் ஒட்டகத் திருவிழா கிட்டத்தட்டஒரு மாத காலமாக நடைபெற்று இன்று முடிவுக்குவந்தது.
அதன் இறுதி நாளான இன்று அதிகூடிய ஒட்டகங்கள் போட்டியில் பங்கு பற்றியமைக்காக உலக சாதனை விருது வழங்கப்பட்டது.உலகளாவிய ரீதியில் முதல் தடவையாக அதிகூடிய எண்ணிக்கையான 21 ஆயிரத்து 637 ஒட்டகங்கள்இந்த போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்வை காண்பதற்காக சவுதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் OL Ameer Ajwadதும் வருகை தந்திருந்தார்.
இந்த நிகழ்வில் பிரதான படப்பிடிப்பாளர்களுள் ஒருவராக இலங்கை கொட்டராமுல்லையை சேர்ந்தபுகைப்படக் கலைஞர் மற்றும் காணொளி வடிவமைப்பாளரான முஹம்மது ஸைத் பணியாற்றியமையும் இங்குகுறிப்பிடத்தக்கதாகும்.