Monday, November 25, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
Homeமுதல்முறையாக விண்வெளியில் தனிநபர் நடைபயணம்: சாதித்துக் காட்டிய ஸ்பேஸ் எக்ஸ்

முதல்முறையாக விண்வெளியில் தனிநபர் நடைபயணம்: சாதித்துக் காட்டிய ஸ்பேஸ் எக்ஸ்

விண்வெளி ஆய்வுகளுக்காக அல்லாது தனி நபர்களை விண்வெளியில் நடைபயணம் மேற்கொள்ள வைப்பதற்கான முயற்சிகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேற்கொண்டது.

அந்த வகையில் அமெரிக்க கோடீஸ்வரரான ஜாரெட் ஐசக்மேன், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன பொறியியலாளர்கள் சாரா கில்லிஸ், அன்னா மேனன், அமெரக்காவின் முன்னாள் விமானி ஸ்கொட் போட்டீட் ஆகிய நால்வரும் கடந்த செவ்வாய்க்கிழமை விண்வெளிக்குச் சென்றனர்.

அவர்களை ஏற்றிச்சென்ற விண்கலம், நேற்று முன்தினம் புதன்கிழமை பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது.

முதல் நபராக ஜாரெட் ஐசக்மென் 15 நிமிடங்கள் விண்வெளியில் நடந்தார். பின் விண்கலத்துக்குத் திரும்பினார். தொடர்ந்து ஏனையவர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.

ஆபத்தான இம் முயற்சி இரண்டு மணித்தியாலத்துக்குள் முடிக்கப்பட்டது.

 

https://x.com/SpaceX/status/1834185100281741612

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments