Sunday, November 10, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomePAYE வரியை குறைக்க தீர்மானம்..!

PAYE வரியை குறைக்க தீர்மானம்..!

PAYE வரியை (உழைக்கும் போது செலுத்தும் வரி) குறைக்கும் பிரேரணை எதிர்வரும் வரவு செலவு திட்ட பிரேரணையில் உள்ளடக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான பிரேரணையை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பித்து அதற்கான இணக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பிரேரணையின் படி, தற்போது ஒவ்வொரு சம்பள விகிதத்திலிருந்தும் வசூலிக்கப்படும் வரிகள் பின்வருமாறு குறைக்கப்படும்.

மாதாந்தம் 150,000 ரூபாய் வருமானம் ஈட்டும் நபரொருவர் மாதாந்தம் செலுத்தும் 3,000 ரூபாய் வரி 500 ரூபாவால் குறைக்கப்பட்டு 2,500 ரூபாவாக வசூலிக்கப்படும்.

அதேபோல், மாதாந்தம் 300,000 ரூபாய் வருமானம் ஈட்டும் நபரொருவர் மாதாந்தம் செலுத்தும் 7,000 ரூபாய் வரி 3,500 ரூபாய் குறைக்கப்பட்டு 3,500 ரூபாவாக வசூலிக்கப்படும்.

அதேபோல், மாதாந்தம் 450,000 ரூபாய் வருமானம் ஈட்டும் நபரொருவர் மாதாந்தம் செலுத்தும் 76,000 ரூபாய் வரி 12,500 ரூபாவால் குறைக்கப்பட்டு 63,500 ரூபாவாக வசூலிக்கப்படும்.

மாதாந்தம் 6 இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் நபரொருவர் மாதாந்தம் செலுத்தும் 120,000 ரூபாய் வரி 12,500 ரூபாவால் குறைக்கப்பட்டு 107,500 ரூபாவாக வசூலிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments