Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaநாடு முழுவதிலும் அரிசிக்கு தட்டுப்பாடு : விலையும் அதிகரிப்பு..!

நாடு முழுவதிலும் அரிசிக்கு தட்டுப்பாடு : விலையும் அதிகரிப்பு..!

சந்தையில் தற்போது அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவிவருவதன் காரணமாக அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசிக்கான விலையை அதிகரித்துள்ளமையினால் சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்களும் விலையை அதிகரித்துள்ளனர்.

இதன்படி, சந்தையில் கீரி சம்பா தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் அரிசி 210 ரூபாய் முதல் 230 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

எனினும், ஒரு கிலோகிராம் நாடு அரிசி 220 ரூபாவுக்கும், சம்பா அரிசி 230 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாகச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular