Friday, November 1, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeMain NewsAustraliaகையடக்கத் தொலைபேசிக்காக இரு பாறைகளுக்கு இடையே தலைகீழாக சிக்கிய பெண்...!

கையடக்கத் தொலைபேசிக்காக இரு பாறைகளுக்கு இடையே தலைகீழாக சிக்கிய பெண்…!

தவறி விழுந்த கையடக்கத் தொலைபேசியை எடுக்க முயற்சித்து 2 பெரிய பாறைகளுக்கு இடையே பல மணி நேரமாகச் சிக்கிக் கொண்ட பெண் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

நியூ சவுத் வேல்ஸின் ஹண்டர் பள்ளத்தாக்கு பகுதியில் (Hunter Valley) உள்ள 2 பெரிய பாறைகளுக்கு இடையே இளம்பெண் ஒருவர் தலைகீழாகச் சிக்கிக் கொண்டார்.

500 கிலோ எடையுள்ள பெரிய 2 பாறைகளின் இடுக்கில் 7 மணி நேரமாகச் சிக்கிக் கொண்டு தவித்துள்ளார்.

உடனடியாக விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மிகுந்த முயற்சிக்குப் பின் அவரை காப்பாற்றினர்.

மீட்புக்குழுவினர் அங்கு வருவதற்குள், குறித்த சிறுமி சுமார் ஒரு மணிநேரம் தலைகீழாகச் சிக்கியிருந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

6 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அந்த பெண்ணை சிறிய காயங்களுடன் மீட்புக் குழுவினர்கள் வெற்றிகரமாக மீட்க முடிந்ததாகவும், அவரது கையடக்கத் தொலைபேசியை மீட்டெடுக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments