Tuesday, May 27, 2025
HomeCinema1 கோடி பார்வைகளை பெற்ற காதலிக்க நேரமில்லை படத்தின் பாடல்...!

1 கோடி பார்வைகளை பெற்ற காதலிக்க நேரமில்லை படத்தின் பாடல்…!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படம் காதலிக்க நேரமில்லை.

இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

இந்த நிலையில், காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடல்- `என்னை இழுக்குதடி’ சில வாரங்களுக்கு முன் வெளியானது.

ஏ.ஆர். ரகுமான் மற்றும் தீ இணைந்து பாடியுள்ள என்னை இழுக்குதடி பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதுவரை இப்பாடல் 10 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments