ஐக்கிய மக்கள் சக்தியின் 4 தேசியப் பட்டியல் நாடாளுமன்ற ஆசனங்களுக்கான பெயர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிஸாம் காரியப்பர், ஐக்கிய மக்கள் சக்தியின் சுஜீவ சேனசிங்க மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மொஹமட் இஸ்மாயில் முத்து மொஹமட் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 5 தேசியப்பட்டியல் ஆசனங்களைக் கைப்பற்றியதுடன், அதில் ஒரு ஆசனத்துக்காகக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார முன்னதாக நியமிக்கப்பட்டிருந்தார்.