Monday, December 23, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeMain NewsSri Lankaஇலங்கைக்கு அனுப்புமாறு கோரிய யாழ் இளைஞனை நாட்டுக்கு அழைத்து வரம் முயற்சியில் நாமல்..!

இலங்கைக்கு அனுப்புமாறு கோரிய யாழ் இளைஞனை நாட்டுக்கு அழைத்து வரம் முயற்சியில் நாமல்..!

தம்மை மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு கோரி தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

தம்மை மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு கோரி, இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக மண்டியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணொளி ஒன்றைத் தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது தமிழகத்தில் தஞ்சமடைந்த ஒருவரே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் அல்லது தம்மை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறித்த நபர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில், குறித்த காணொளியை தமது எக்ஸ் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்துடன் இணைந்து உடனடியாக குறித்த நபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் போரின் விளைவாக எந்தவொரு இளைஞரினதும் எதிர்காலம் மறுக்கப்படக் கூடாது எனவும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்குத் தாம் தயாராகவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments