TikTok முடக்கம்

அல்பேனியா அரசாங்கம் TikTok அணுகலை ஒரு வருடத்திற்கு முடக்க முடிவு செய்துள்ளது.

குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள தாக்கத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த தடை விதிக்கப்படும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அல்பேனியாவில் கடந்த மாதம் பாடசாலையொன்றில் 14 வயது மாணவன் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவமே இந்த TikTok ஒடுக்குமுறைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கத்திக்குத்து சம்பவத்தில் 14 வயது மாணவன் உயிரிழந்தார். இருப்பினும், முன்மொழியப்பட்ட TikTok தடை குறித்து அல்பேனிய அரசாங்கத்திடம் இருந்து அவசர விளக்கத்தை எதிர்பார்ப்பதாக TikTok கூறியது.

கொலை செய்யப்பட்ட 14 வயது பாடசாலை மாணவனோ அல்லது கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபரோ TikTok கணக்குகளை வைத்திருந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று TikTok தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles