Saturday, January 4, 2025
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeMain NewsIndiaபழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் நாளை இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

இதற்கான இறுதிக்கட்டப் பணி 25 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ இன்று இரவு 8.58 மணிக்கு தொடங்க இருக்கிறது.

இந்த ராக்கெட் ‘ஸ்பேடெக்ஸ்-ஏ’, ‘ஸ்பேடெக்ஸ்-பி’ என இரண்டு சிறிய ரக செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது.

பூமியில் இருந்து 470 கி.மீ. உயரத்தில் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் இந்த இரு செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்பட உள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி60 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட உள்ள நிலையில், பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments