Saturday, January 11, 2025
HomeGossipsபுல் மப்பு சரக்கு போத்தலுடன் உள்ளே வரவா? விஷாலை வெளுத்து வாங்கிய பிரபல பாடகி

புல் மப்பு சரக்கு போத்தலுடன் உள்ளே வரவா? விஷாலை வெளுத்து வாங்கிய பிரபல பாடகி

சில ஆண்டுகளுக்கு முன் சுச்சி லீக்ஸ் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சுசித்ரா, சமீபத்தில் மீண்டும் எண்ட்ரி கொடுத்து பல பிரபலங்களை பற்றி பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். தனுஷ், நயன் தாரா உள்ளிட்டவர்கள் பற்றி பேசி வந்த சுசித்ரா, நடிகர் விஷால் குறித்தும் வரம்புமீறி பேசியுள்ளார்.

அதில், விஷாலின் இந்த நிலைமையை பார்த்து பலர் வருத்தப்பட்டு இருப்பீர்கள். நான் விஷால் குறித்து பல வருடத்திற்கு முன் நடந்த விஷயத்தை கூறுகிறேன்.

கார்த்திக் குமாருடன் நான் வாழ்ந்து கொண்டு இருந்தபோதுதான், இந்த சம்பவம் நடந்தது. அடிக்கடி கார்த்திக் குமார் ஏதாவது ஒரு காரணம் சொல்லிவிட்டு வீட்டில் இருந்து வெளியே ஓடிவிடுவார்.

கதவை தட்டிய விஷால்,

ஒருநாள் கார்த்திக் இல்லாதபோது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. கதவை திறந்து பார்த்தால் விஷால் கையில் ஒயின் பாட்டிலுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் போதையில் இருந்தார் என்பது அவரை பார்க்கும்போதே தெரிந்தது.

உடனே கார்த்திக் குமார் இல்லையா என்று கேட்க, நான் இல்லை என்றேன். உடனே நான் உள்ளே வரவா என்று விஷால் கேட்டார். நான் நோ என்று சொல்லிவிட்டேன். உடனே அவர் கையில் இருக்கும் ஒயின் பாட்டிலை என்னிடம் நீட்டி இதற்காகத்தான் வந்தேன் என்றார்.

கார்த்திக்குமார் இல்லாத நேரமாக பார்த்து வீட்டுக்கு வந்து எனக்கு ஒயின் பாட்டிலை கொடுத்தார். நான் அதை வாங்காமல் கெளதம் மேனன் அலுவலகத்தில்தான் கார்த்திக்குமார் இருக்கிறார், அங்கேபோய் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு கெட்டவார்த்தையால் அவனை திட்டினேன்.

அது அவன் காதில் விழ, என்ன சொன்னீங்க என்றதும், இங்கே ஒரு பூனை அடிக்கடி இப்படித்தான் தொல்லை பண்ணும் நீங்க போங்க என்று சொல்லிவிட்டு கதவை சாத்திவிட்டேன் என்று சுசித்ரா பகிர்ந்துள்ளார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments