மார்ச் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 1,732,263 பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் கொடுப்பனவு வரவு வைக்கப்படவுள்ளது.
இந்நிலையில் ரூ12.6 பில்லியன் வரவு வைக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.