ஷேக் ஹசீனா சொத்துக்களை பரிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் மற்றும் இனப்படுகொலை உள்ளிட்ட வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அவரை நாடு கடத்த வேண்டும் என பங்களாதேஷ் அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஷேக் ஹசீனாவின் குடும்ப சொத்துக்களை பறிமுதல் செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஷேக் ஹசீனா மீதான வழக்கில் ஊழல் தடுப்பு ஆணையகத்தின் கோரிக்கையை ஏற்று டாக்கா நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஷேக் ஹசீனாவின் வீடு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சில சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஷேக் ஹசீனாவின் குடும்பத்திற்குச் சொந்தமான 124 வங்கிக் கணக்குகளை முடக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles