Saturday, May 24, 2025
HomeMain NewsAmerica99 வீத சொத்தை மக்களுக்கு வழங்கும் பில்கேட்ஸ் ! ஏழை குழந்தைகளை கொல்லும் எலான் மாஸ்க்

99 வீத சொத்தை மக்களுக்கு வழங்கும் பில்கேட்ஸ் ! ஏழை குழந்தைகளை கொல்லும் எலான் மாஸ்க்

அடுத்த 20 ஆண்டுகளில் தன்னுடைய சொத்தில் 99 சதவீதத்தை பொதுமக்களுக்கு வழங்கும் என்றும், 2045ஆம் ஆண்டிற்குள் கேட்ஸ் அறக்கட்டளை அதன் செயல்பாட்டை நிறுத்திவிடும் எனவும் மைக்ரோசாப்ட் ஃபவுண்டர் பில்கேட்ஸ் அறிவித்துள்ளார்.

அதோடு ஏழை குழந்தைகளைக் கொன்று வருவதாக கூறி எலான் மஸ்க் மீது குற்றம் சாட்டியுள்ளார். ஃபைனான்சியல் டைம்ஸ் உடன் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட பில்கேட்ஸ்,

உலகம் முழுவதும் உதவிகளை வழங்கி வரும் ஏஜென்சியான US ஏஜென்சி ஃபார் இன்டர்நேஷனல் டெவலப்மெண்டிற்கு வழங்கி வந்த உதவியை எலான் மஸ்க் சமீபத்தில் நிறுத்தியதை விமர்சித்துப் பேசினார்.

இதன் விளைவாக மீசில்ஸ், HIV மற்றும் போலியோ போன்ற நோய்கள் மீண்டும் அதிக அளவில் ஏற்படுவதற்கு எலான் மஸ்க் காரணமாக இருக்கப் போவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்

இந்த உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர், இந்த உலகத்திலேயே ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளை கொல்வது என்பது நல்ல விஷயம் கிடையாது என்று கேட்ஸ் கூறியுள்ளார்.

எலான் மஸ்க் US ஏஜென்சி ஃபார் இன்டர்நேஷனல் டெவலப்மெண்டிற்கு வழங்கி வந்த பணத்தை நிறுத்தியதன் விளைவாக தற்போது HIVயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை அவர் நேரில் சென்று சந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் , மீதம் இருக்கக்கூடிய தன்னுடைய சொத்தை அடுத்த 20 வருடங்களில் லாப நோக்கம் இல்லாத அறக்கட்டளைகளுக்கு கொடுக்க இருப்பதாகவும் பில்கேட்ஸ் அறிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments