ஓப்போ A5x 5G ஸ்மார்ட்போன் நேற்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
இதில் 4GB வரை RAM மற்றும் 128GB வரை ஸ்டோரேஜ் உள்ளது.
இது 1,000nits பிரைட்னஸ் கொண்டுள்ளது.
நிறுவனத்தின் தகவலின்படி, ஓப்போ A5x 5G அதன் முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது 160 சதவீதம் அதிக உறுதி மற்றும் ஃபிளாக்ஷிப் கிரேடு ரீ-இன்ஃபோர்ஸ் செய்யப்பட்ட கிளாஸ் உடன் வருகிறது.
இது IP65 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போ் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் ஓப்போ A5x 5G விலை
இந்தியாவில் ஓப்போ A5x 5G மாடலின் 4GB + 128GB விலை ரூ. 13,999 இல் தொடங்குகிறது.
இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் ப்ளூ மற்றும் லேசர் ஒயிட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகள் மூலம் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் ரூ.1,000 உடனடி கேஷ்பேக் மற்றும் மூன்று மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகையை பெறலாம்.
ஓப்போ A5x 5G அம்சங்கள்
ஓப்போ A5x 5G ஸ்மார்ட்போன் டூயல் சிலம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 15 சார்ந்த கலர்ஓஎஸ் 15 கொண்டிருக்கிறது.
இது 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 1,000nits பிரைட்னஸ் கொண்ட 6.67 இன்ச் 1604×720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே கைவிரல் ஈரமாக இருக்கும் போதும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 6nm முறையில் உருவாக்கப்பட்ட மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 4GB வரை LPDDR4x RAM மற்றும் 128GB UFS 2.2 மெமரி வழங்கப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் 32MP பிரைமரி கேமரா, டெப்த் சென்சார் என டூயல் கேமரா செட்டப் உள்ளது.
முன்புறம் 5MP செல்ஃபி கேமரா உள்ளது.
கனெக்டிவிட்டியை பொறுத்தவரை ஓப்போ A5x 5G-யில் 5G, டூயல் 4G VoLTE, Wi-Fi 5, ப்ளூடூத் 5.1, GPS, GLONASS மற்றும் USB Type-C ஆகியவை அடங்கும்.
இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் MIL-STD தர மிலிட்டரி கிரேடு சான்று பெற்றுள்ளது.
மேலும், IP65 தரச்சான்று கொண்ட வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டணட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஓப்போ A5x 5G, 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான வசதியுடன் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.