இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறுகின்றது.
குறித்த போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இந்தநிலையில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
