Monday, February 2, 2026
HomeSportsவெற்றிக் கொண்டாட்டங்களை கட்டுப்படுத்தும் வகையிலான விதிகளை வகுக்க BCCIயினால் குழுவொன்று நியமனம்...!

வெற்றிக் கொண்டாட்டங்களை கட்டுப்படுத்தும் வகையிலான விதிகளை வகுக்க BCCIயினால் குழுவொன்று நியமனம்…!

கிரிக்கெட் தொடர்பான வெற்றி விழாக் கொண்டாட்டங்களைக் கட்டுப்படுத்தும் வகையிலான விதிகளை வகுப்பதற்கான குழுவொன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் நியமிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தேவஜித் சைக்கியா தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், ரோயல் செலன்ஜ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றதை அடுத்து இடம்பெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையிலேயே குறித்த குழுவினை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நியமித்துள்ளது.

இதன்படி, 15 நாட்களுக்குள் அறிக்கையினை சமர்ப்பிக்கும்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, குறித்த குழுவை அறிவுறுத்தியுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular