Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaகாற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்..!

காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்..!

நாட்டின் சில பகுதிகளில் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அந்த வகையில் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என, அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular