Monday, February 2, 2026
HomeMain NewsMiddle Eastகாங்கோவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் - 80 பேர் பலி

காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் – 80 பேர் பலி

கட்டார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியாளர்கள், காங்கோவில் சுமார் 80 பேரைக் கொன்றுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் கனிம வளங்கள் நிறைந்த கிழக்குப்பகுதியில் அவற்றைக் கைப்பற்ற 100க்கும் மேற்பட்ட கிளர்ச்சிப் படைகள் முயற்சித்து வருகின்றன.

இதனால் நீண்ட காலமாக அங்கு தொடர்ந்து போர் நடைபெற்று வருகின்றது.

சமீபத்தில், அண்டை நாடான ருவாண்டாவின் ஆதரவு பெற்ற, ‘எம் – 23’ கிளர்ச்சிப் படையினர், காங்கோவின் 2 முக்கிய நகரங்களைக் கைப்பற்றினர்.

காங்கோ நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் நடத்தும் காரணமாக இலட்சக் கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், கட்டார் தலைமையில் காங்கோ, ருவாண்டா இடையே அமைதிப் பேச்சு நடந்து வருகிறது.

ஆகஸ்ட் 18ஆம் திகதிக்குள் காங்கோவையும், கிளர்ச்சியாளர்களையும் நிரந்தர அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கட்டார் முயற்சித்து வருகிறது.

பொதுமக்களைப் பாதுகாப்பதும், மோதலால் இடம்பெயர்ந்தவர்களைப் பாதுகாப்பாக நாடு திரும்ப வைப்பதும் இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த நிலையில், நியாபோரோங்கோ (Nyabarongo), லும்பிஷி (Lumbishi) உள்ளிட்ட கிராமங்களில், ‘எம் – 23’ கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 வாரங்களில் மட்டும் குழந்தைகள் உட்பட 80 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular