ஆசிய கோப்பையில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறுவாரா? வெளியான தகவல்

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயிலும், ஓமனை செப்.19-ந் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம் பெறுவாரா இல்லை என்பது உடற்தகுதி மதிப்பீட்டை வைத்து தெரியவரும்.

31 வயதான ஹர்திக் பாண்ட்யா, ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் உள்ள பிசிசிஐயின் சிறப்பு மையத்தில் (COE) இரண்டு நாள் உடற்தகுதி மதிப்பீட்டை மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மதிப்பீட்டின் முடிவு, ஆசிய போட்டியில் பாண்ட்யா பங்கேற்க அனுமதிக்கப்படுகிறாரா இல்லையா என்பதை தீர்மானிக்கும்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles