Monday, February 2, 2026
HomeSportsஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: சின்னர், கோகோ காப் 2-வது சுற்றுக்கு தகுதி

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சின்னர், கோகோ காப் 2-வது சுற்றுக்கு தகுதி

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ஜானிக் சின்னர் (இத்தாலி) தொடக்க சுற்றில் செக் குடியரசுவை சேர்ந்த கோபிரிவாவை எதிர் கொண்டார். இதில் சின்னர் 6-1, 6-1 ,6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 38 நிமிட நேரமே தேவைப்பட்டது.

10-வது வரிசையில் உள்ள லாரென்சோ முசெட்டி (இத்தாலி) 6-7 (3-7), 6-3,6-4,6-4 என்ற செட் கணக்கில் பெரிகார்டை (பிரான்ஸ்) தோற்கடித்தார். 8-ம் நிலை வீரரான அலெக்ஸ் டி மினாவூர் (ஆஸ்திரேலியா), 14-வது வரிசையில் இருக்கும் டோமி பவுல் (அமெரிக்கா) ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது வரிசையில் இருக்கும் கோகோ காப் (அமெரிக்கா) 6-4, 6-7 (2-7) 7-5 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீராங்கனை டாம்லஜனோவிக்கை தோற்கடித்தார்.

மற்ற ஆட்டங்களில் 8-வது வரிசையில் உள்ள அமண்டா அனிஸ்மோவா (அமெரிக்கா ), நவோமி ஒசாகா (ஜப்பான்), லிண்டா நோ சக்வா (செக் குடியரசு) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular