ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வினால் சுமார் 10 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் சுமார் 260 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகின்றது.
நில அதிர்வினால் பல்க் (Balkh) மற்றும் சமங்கான் மாகாணங்களின் சில பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தலிபான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஒகஸ்ட் 31ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் 6.0 ஆக பதிவான நில அதிர்வில் 2,200 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
