Monday, February 2, 2026
HomeMain Newsவெனிசுலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார்

வெனிசுலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார்

வெனிசுலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார்.

அமெரிக்க இராணுவத்தால் நாடு கடத்தப்பட்ட வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெனிசுலாவை நிலையான, நம்பிக்கையான ஆட்சியின் கையில் ஒப்படைக்கும் வரையில் அமெரிக்கா நிர்வாகம் செய்யும் எனவும், வெனிசுலா மசகு எண்ணெய் வளங்களை பாதுகாக்க இராணுவம் களத்தில் நிறுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் அமெரிக்க இராணுவ படைகள் ஜனவரி 3ஆம் திகதியன்று நடத்திய அதிரடி தாக்குதலில் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டார். அவர் வெனிசுலா நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பூமியின் நரகம் என்று அழைக்கப்படும் ஆர்.புரோக்லின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular