வடக்கு கிழக்கு பொது அமைப்புக்களால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமும் வேண்டாம், பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பாதற்கு என கொண்டுவர இருக்கின்ற PSTA சட்டமும் வேண்டாம் என்று அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் கையெழுத்து போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை சந்நிதி முருகன் ஆலய முன்றிலில் இடம்பெற்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள், குரல் அற்றோரின் குரல் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் கொட்டடி கோமகன், தமிழர் கலைமன்ற இயக்குனர் கமலகாந்தன் உட்பட பொது அமைப்பு பிரதிநிதிகள் இணைந்து கையொப்பம் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சந்நிதி முருகனை தரிசிக்க வந்த அடியவர்கள் பல நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் கையொப்பமிட்டனர்.

author avatar
Selvarajah

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here