குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே பயன்படுத்திய கணினிகள், கையடக்கத் தொலைபேசிகள், மின்னஞ்சல் தகவல்கள் மற்றும் அவரது வங்கிக் கணக்குகளை விரிவாக ஆய்வு செய்யப் புலனாய்வாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
2019 ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்குச் சதி செய்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொடை பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு நேற்று முன் தினம் காலை சுரேஷ் சாலே பணிக்குச் சென்று கொண்டிருந்தபோதே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழு அவரை கைது செய்தது

















