அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் முன்னாள் ஜனாதிபதி பலி!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் மீது நடத்திய வான்வழித் தாக்குதல்களில், அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நிஜாத் கொல்லப்பட்டார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் கிழக்குப் பகுதியில் உள்ள நர்னக் மாவட்டத்தில் அமைந்துள்ள அஹ்மதிநிஜாத்தின் இல்லத்தைக் குறிவைத்து சனிக்கிழமை இரவு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 69 வயதான மஹ்மூத் அஹ்மதிநிஜாத் மற்றும் அவரது மெய்க்காப்பாளர்கள் உயிரிழந்துள்ளதாக ஈரானின் ஐ.எல்.என்.ஏ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் ஈரானில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் மற்றும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியைத் தொடர்ந்து, அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த இடத்தைத் துல்லியமாகக் கண்டறிந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மஹ்மூத் அஹ்மதி நிஜாத் 2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஈரானின் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

தனது பதவிக்காலத்தில் இஸ்ரேலுக்கு எதிரான கடுமையான கருத்துக்கள் மற்றும் ஈரானின் அணுசக்தித் திட்டத்தை தீவிரப்படுத்தியமைக்காக அவர் சர்வதேச அளவில் அறியப்பட்டவர்.

2023 ஆம் ஆண்டில் அமெரிக்கர்களால் சிறைபிடிக்கப்பட்டவர்களைத் தவறாக நடத்திய குற்றச்சாட்டின் கீழ் இவர் மீது அமெரிக்கா தடைகளை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles