யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சேர். பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீட இசைத் துறையின் முன்னாள் தலைவர் சங்கீதபூஷணம் கலாநிதி ந.வி. மு.நவரத்தினம் தனது 75ஆவது வயதில் இன்று சனிக்கிழமை காலமானார்.
யாழ். பல்கலைக்கழக இசைத்துறையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய அமரர் சங்கீதபூஷணம் கலாநிதி ந.வி.மு.நவரத்தினம் நயினாதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சைவமும், தமிழும் தளைத்தோங்க அரும்பணியாற்றிய இவர் தமிழ் இசைத் துறையில், திருமுறைப் பாராயணங்கள், தமிழிசை வளர்ச்சியில் அரும் பங்காற்றியிருந்தார்.
இவர் யாழ்.பல்கலைக்கழக, சேர்.பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்து இசைத்துறையின் தற்போதைய விரிவுரையாளர்களான ந.பரந்தாமன், கலாநிதி அ.ஸ்ரீநாகபூஷணி ஆகியோரின் தந்தையாருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக காரைக்கால் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
