வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அவரைப் பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி இன்று வெள்ளிக்கிழமை காலை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு லங்கா உர நிறுவனத்தின் கொள்முதல் மேலாளராகப் பணியாற்றிய காலத்தில், அரசாங்கத்துக்கு 8.8 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தினார் எனக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிற்காகவே அவர் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டார்.
இந்த வழக்கு நேற்று கொழும்பு மேல்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதியான அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் வாசித்துக் காட்டப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
