இயக்கச்சியில் இராணுவத் தேவைக்காக காணி சுவீகரிப்பை எதிர்த்து போராட்டம்

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் இராணுவ தேவைக்காக 25 ஏக்கர் காணியை சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிராக நாளை வியாழக்கிழமை எதிர்ப்பு போராட்டத்திற்கு அனைவரையும் அணி திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணியை இராணுவ முகாமினை அமைக்கும் நோக்குடன் நிரந்தரமாக சுவீகரிக்கும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், காணி சுவீகரிப்பின் முதல்கட்டமாக காணியினை அளவீடு செய்யும் பணிகள் நில அளவை திணைக்களத்தால் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்நிலையில் தனியார் காணிகளை இராணுவ தேவைக்கு சுவீகரிப்பதற்கு எதிராக இயக்கச்சி பகுதியில் பாரிய போராட்டம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் , குறித்த போராட்டத்திற்கு வேறுபாடுகள் இன்றி அனைத்து தரப்பினரும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles