கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஏ-35 பரந்தன் முல்லைத்தீவு வீதியில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று (03) இரவு 10ஆம் வீதியால் சென்றுகொண்டிருந்த புல்டோசர் வாகனத்தின் மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஜெரின் கனிஸ்ரன் என்ற 19 வயது இளைஞனும், தியாகராசா விக்கினேஸ்வரன் என்ற 18 வயது இளைஞனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
