இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 12.5 கிலோ கிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 4,765 ரூபாய்.
5 கிலோகிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 308 ரூபாவால் உயர்ந்துள்ளதுடன் அதன் புதிய 1,910 ரூபாயாகும்.
2.3 கிலோகிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 140 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அதன் புதிய 890 ரூபாய் என லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது
