லெபனான்மீது இன்றைய தினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 89 பேர் உயிரிழந்தனர், 700 பேர் காயமடைந்தனர்.
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை இலக்கு வைத்து இஸ்ரேல் இன்று புதன்கிழமை மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்தியது. 10 நிமிடங்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்கள் மற்றும் கட்டளை மையங்களை தாக்கியதாக இஸ்ரேல் தெரிவித்திருந்து.
இந்நிலையில், இந்தத் தாக்குதலில் 89 பேர் கொல்லப்பட்டனர். 700 பேர் வரையிலானோர் காயமடைந்தனர் என்று லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் 12 மருத்துவ பணியாளர்களும் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
