இந்திய துணை ஜனாதிபதி வடக்கு, கிழக்குக்கும் வருவார்!

எதிர்வரும் 19ஆம் திகதி இலங்கை வரும் இந்தியாவின் துணை ஜனாதிபதி சி. பி. இராதாகிருஷ்ணன் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கும் வருகை தரவுள்ளார்.

இரு நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வரும் அவர், திருகோணமலை மாவட்டத்தில் எண்ணெய் தாங்கிகள் மீளமைப்பு திட்டம், முல்லைத்தீவு, புத்தளம், தெனியாய பகுதிகளில் இந்திய நிதியுதவில் மேற்கொள்ளப்படும் மருத்துவமனைகளின் அபிவிருத்தியையும் பார்வையிடுவார்.

மேலும், அவரின் இந்தப் பயணத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய துணை ஜனாதிபதி இந்தப் பயணத்தில், ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், வடக்கு – கிழக்கு மற்றும் மலையக தமிழ் அரசியல் தரப்புகளையும் சந்திப்பார் என்றும் அறிய வருகிறது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles