வயது 89
புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) London, United Kingdom
திதி:13/04/2026
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம் ஆலடி சந்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ரேவதி சண்முகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும்
பாதுகாத்த எங்கள் அன்பு அன்னையே
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது தான் ஏனோ
நாம் விரும்பும் ஒரு உயிர் – நம்மை
விட்டு விலகி நிற்கும் போது தான் தெரிகின்றது
கண்ணீர் துளிகளின் விலை என்னவென்று அம்மா!
எத்தனை உறவுகள் அருகிலிருந்து
அன்பினைப் பொழிந்தாலும் அத்தனையும்
உந்தன் அன்புக்கு ஈடாகுமா அம்மா!
ஆருயிர் அம்மாவே.!
பார்க்கும் பொருளெல்லாம் உங்கள் முகம்!
போகுமிடமெல்லாம் உங்கள் நினைவு!
கேட்கும் குரலெல்லாம் உங்கள் குரல்!
வருடங்கள் எத்தனை சென்றாலும்
மாறுமோ இன் நிலமை..?..!!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
