இணையத் தளங்கள் கேபிள் ரி.விக்களில் ஜனநாயகன் திரைப்படம் ஒளிபரப்ப தடை

ஜனநாயகன் படத்தை இணை​யதளங்​கள், கேபிள் ரி.விக்​களில் ஒளிபரப்ப இடைக்​காலத் தடை விதித்து சென்னை உயர் நீதி​மன்​றம் உத்தர​விட்​டுள்​ளது.

நடிகரும், த.வெ.க. தலை​வரு​மான விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ படத்​துக்கு தணிக்​கைச் சான்​றிதழ் பெறு​வ​தில் சிக்​கல் ஏற்​பட்ட நிலை​யில், திரையரங்​கு​களில் அந்த படம் இன்​னும் வெளி​யாக​வில்​லை.

இந்த சூழலில், சில நாட்​களுக்கு முன்பு இணை​யதளங்​களில் இப்படம் சட்​ட​விரோத​மாக வெளியானது.

இந்​நிலை​யில், இணை​யதளங்​கள், கேபிள் ரி.விக்​களில் இந்த படத்தை ஒளிபரப்ப தடைவிதிக்​கக் கோரி சென்னை உயர்நீதி​மன்​றத்​தில் படத் தயாரிப்பு நிறு​வன​மான கேவிஎன். புரொடக்ஷன்ஸ் சார்​பில் வழக்கு தொடரப்​பட்​டது.

நீதிபதி செந்​தில்​கு​மார் ராமமூர்த்தி முன்பு இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது மனு​தா​ரர் தரப்​பில், ‘தணிக்கை வாரி​யம் சான்​றிதழ் வழங்​கும் முன்​பாகவே இணை​யதளத்​தில் ஜனநாயகன் திரைப்​படம் கசி​ய​விடப்​பட்​டுள்​ளது.

மேலும், கோவை​யில் கேபிள் டிவியிலும் இந்த படம் ஒளிபரப்பு செய்​யப்​பட்​டுள்​ளது. அதிக செல​வில் எடுக்​கப்​பட்ட இந்த படத்தை சட்​ட​விரோத​மாக இணை​யதளங்​கள், கேபிள் ரி.விக்​களில் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்​டும்’ என்று வாதிடப்​பட்​டது.

இதையடுத்​து, ஜனநாயகன் படத்தை இணை​யதளங்​கள், கேபிள் ரி.விக்​களில் சட்​ட​விரோத​மாக ஒளிபரப்​பக் கூடாது என இடைக்​காலத்​தடை விதித்து நீதிபதி உத்​தர​விட்​டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles