அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீதான வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை மீண்டும் மே 20ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக சுரேஷ் சலே, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
