ஹோர்முஸ் நீரிணையில் என்ன நடக்கிறது?

ஹோர்முஸ் நீரிணையில் மூன்று சரக்கு கப்பல்கள் மீது ஈரானின் ஐ. ஆர். ஜி. சி. என்று அழைக்கப்படும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியுள்ளது.

இது குறித்து ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட தகவல்கள் வருமாறு,

ஓமானுக்கு வடகிழக்கே 15 கடல் மைல் தூரத்தில ஐ. ஆர். ஜி. சி.யின் கடற்படை கொள்கலன் கப்பல் ஒன்றின்மீது தாக்குதல் நடத்தியுள்ளது. எபமினோண்டாஸ் என்ற கப்பலே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானது. இந்தக் கப்பல் கிரேக்க நிறுவனத்துக்கு சொந்தமானது என்று ஐரோப்பிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாடடு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதேபோன்று ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த நிறுவனத்துக்கு சொந்தமானதும் பனாமா கொடியுடன் பயணித்ததுமான யூபோரியா என்ற கப்பல் ஈரானுக்கு மேற்கே 8 கடல் மைல் தொலைவில் தாக்குதலுக்கு இலக்கானது. இந்தக் கப்பலின் பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று ஐரோப்பிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம தெரிவித்துள்ளது.

இவை தவிர, பனாமா கொடியுடன் பயணித்த எம். எஸ். சி. பிரான்செஸ்கா கப்பல் ஹோர்முஸின் தெற்கு நோக்கி ஓமான் வளைகுடாவுக்குள் சென்றுகொண்டிருந்தபோது ஈரான் கடற்கரையிலிருந்து 6 கடல் மைல் தொலைவில் தாக்கப்பட்டது. இந்தக் கப்பலின் மேற்பரப்பு சேதமடைந்துள்ளது.

மேலும், எம். எஸ். சி. பிரான்செஸ்கா, எபமினோண்டாஸ் கப்பல்கள் ஈரானின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றும் முறையான அனுமதிகளை பெறாமல் அவை இயங்கின எனவும் ஐ. ஆர். ஜி. சி. கடற்படை தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles