நல்லை ஆதீனத்தின் இரண்டாவது குரு மஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் திருவுருவச்சிலை இன்று புதன்கிழமை நல்லூரில் திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீன வளாகத்தில் அவரின் சிலை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
நல்லை ஆதீன குரு முதல்வராக விளங்கிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் முதலாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இந்தச் சிலை திறந்து வைக்கப்பட்டது.
நல்லை ஆதீன அறக்கட்டளையின் செயலாளர் கலாநிதி ஆறு திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சிலையை கம்பவாரிதி இ.ஜெயராஜ் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பண்டிதர் சிவஸ்ரீ ஜெகதீஸ்வரக் குருக்கள், தவத்திரு வேலன் சுவாமிகள், ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், நாகவிகாரை விகாரதிபதி, உள்ளிட்ட பல சமயத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
