உக்ரைன் தொடர்பான சர்வதேச ஒப்பந்தக் கடமைகளை “அமெரிக்கா தலைமை நிர்வாகம் மதிக்க வேண்டும் என பிரித்தானிய இளவரசர் ஹரி வலியுறுத்தியுள்ளார்.
கீவ் பாதுகாப்பு மன்றத்தில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தான் ஒரு அரசியல்வாதியாக அல்ல, மாறாக ஒரு படைவீரராகவும் மனிதாபிமானியாகவும் பேசுவதாகத் தெளிவுபடுத்தினார்.
எவ்வாறாயினும் ஹாரியின் கருத்தை நிராகரித்த ட்ரம்ப், சசெக்ஸ் கோமகன் இங்கிலாந்துக்காகப் பேசுவதில்லை என விமர்சித்துள்ளார். இளவரசர் ஹரியைவிடத் தான் இங்கிலாந்துக்காக அதிகமாகப் பேசுவதாக நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
