அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் பேச்சுகளில் ஈடுபடாது – ஜனாதிபதி மசூத்

அழுத்தம், அச்சுறுத்தல்கள் மற்றும் தடைகளுக்கு மத்தியில் ஈரான் பேச்சுகளில் ஈடுபடாது என்று அந்த நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் தெரிவித்துள்ளார்.

மெஹர் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில்இ பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடனான தனது தொலைபேசி உரையாடலின் போதுஇ பேச்சுகள் மற்றும் போர்நிறுத்த காலம் ஆகிய இரண்டின் போதும் அமெரிக்காவின் தொடர்ச்சியான மீறல்களையும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளையும் ஈரான் ஜனாதிபதி விமர்சித்தார்.

ஈரான்மீது அமெரிக்கா விதித்துள்ள கடல்சார் கட்டுப்பாடுகள் போர் நிறுத்த புரிந்துணர்வுகளின் தெளிவான விதிமீறல் என்றும் அவை ஐக்கிய நாடுகள் சாசனத்துக்கு முரணானவை என்றும் ஈரான் ஜனாதிபதி கூறினார். இத்தகைய அச்சுறுத்தும் நடவடிக்கைகள் என்பது அமெரிக்காவின் இராஜதந்திர செயல்முறைகள் குறித்த சந்தேகங்களை அதிகரித்துள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பை பேணுவதில் ஈரானின் உறுதியை வலியுறுத்திய பெசஷ்கியான்இ அமெரிக்காஇ இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மீண்டும் ஒரு போர் ஏற்பட்டால்இ அது பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைமீது பெரும் விளைவுகளை உருவாக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles